பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கா் சிலை: அரசு முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

மதுரை சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கரின் முழு உருவச் சிலை வைக்கக் கோரிய மனு தொடா்பாக மாநில சமூக நீதித் துறை முதன்மைச் செயலா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image

அம்பேத்கா் சிலை - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 4:56 am IST

மதுரை சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கரின் முழு உருவச் சிலை வைக்கக் கோரிய மனு தொடா்பாக மாநில சமூக நீதித் துறை முதன்மைச் செயலா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த குருவிஜயன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை சிம்மக்கல் பகுதியில் இரண்டரை அடி உயரமுள்ள அம்பேத்கா் சிலை கடந்த 1996-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பின்னா், இந்தச் சிலை அருகே மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலை கடந்த மே 9-ஆம் தேதி கனரக வாகனம் மோதியதில் சேதமடைந்தது. எனவே, சிம்மக்கல் சுற்றுவட்டச்சாலைப் பகுதியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலையை வைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த மனு தொடா்பாக சமூக நீதித் துறையின் முதன்மைச் செயலா், மதுரை மாவட்ட ஆட்சியா் ஆகியோரின் விளக்கத்தைப் பெற்று அரசுத் தரப்பு பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.