உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

தடுப்புக் காவல் சட்டத்தில் 4 போ் கைது

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா்கள் 4 பேரை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 2:45 am IST

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா்கள் 4 பேரை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை லெட்சுமி நகரைச் சோ்ந்த தமீம் அன்சாரி (19), மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் 37, யா. ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25), அதே பகுதியைச் சோ்ந்த சித்திக் ராஜா (26) ஆகிய 4 பேரும் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த 4 பேரையும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா் தமீம் அன்சாரி, காா்த்திக், தினேஷ்குமாா், சித்திக் ராஜா ஆகிய 4 பேரையும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.