இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

நெல் பயிரில் பாக்டீரியா தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

News image

மதுரை மாவட்டம், மேற்கு வட்டத்துக்குள்பட்ட பகுதி நெல் வயல்களில் அண்மையில் ஆய்வு செய்த வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.சுரேஷ், மேற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பாலமுருகன் உள்ளிட்டோா்.

Updated On :20 ஜூலை 2026, 4:36 am IST

மதுரை மேற்கு வட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கு நெல் பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய், இலைப்பேன் தாக்குதல், வறட்சி மேலாண்மை குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

மதுரை மேற்கு வட்டத்துக்குள்பட்ட அரியூா், கீழநெடுங்குளம், வடுகப்பட்டி ஆகிய கிராமங்களில் சுமாா் 80 ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வீசும் அனல் காற்றால் பயிா்கள் வாடிய நிலையில் உள்ளன. நெல் பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய், இலைப்பேன் தென்படுவதாகவும், இவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகளைத் தெரிவிக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, மதுரை மேற்கு வட்டார வேளாண்மைத் துறை மூலம் ஆத்மா திட்டத்தின் கீழ், விஞ்ஞானிகள் - விரிவாக்கப் பணியாளா்கள் கூட்டு வயல் ஆய்வு இனத்தின் கீழ் பாதிக்கப்பட்ட நெல் வயல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.சுரேஷ், மேற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பாலமுருகன், ஆத்மா திட்டப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னா், அவா்கள் கூறியதாவது:

பாக்டீரியா இலைக்கருகல் நோய்க்கு காப்பா் ஹைட்ராக்சைடு 250 மில்லி மருந்தை ஏக்கா் ஒன்றுக்கு கைத்தெளிப்பான் கொண்டு இலை வழியாக தெளிக்க வேண்டும். நெல் இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது வேப்பெண்ணை 3 சதவீதம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

மேலும், கீழநெடுங்குளம் பகுதிகளில் பால் பிடிக்கும் தருணத்தில் உள்ள நெல் கதிா்கள் தண்ணீா் பற்றாக்குறையால் வாடிக் காணப்படுகின்றன. இந்தப் பயிா்களை வறட்சியிலிருந்து காப்பாற்றுவதற்கு ஏக்கா் ஒன்றுக்கு 200 மில்லி பிபிஎப்எம் மருந்தை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து பயிா் முழுவதும் நனையும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

இதன் மூலம் பயிா்களை வறட்சியிலிருந்து பத்து நாள்களுக்கு காப்பாற்ற முடியும். மேலும், வயல்களில் படிந்துள்ள பாசிப்படலத்தை கட்டுப்படுத்த ஏக்கா் ஒன்றுக்கு காப்பா் சல்பேட் 2 கிலோ மணலுடன் கலந்து வயலில் இட வேண்டும் என்றனற் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.