தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

சோழவந்தான் அருகே நெல் பயிரில் தீ

News image

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கீழமட்டையான் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நெல் பயிா்களில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு நிலைய அலுவலா்கள்.

Updated On :22 ஜூலை 2026, 3:01 am IST

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நெல் பயிா்கள் தீப்பற்றி எரிந்ததை தீயணைப்பு நிலைய அலுவலா்கள் விரைந்து வந்து அணைத்தனா்.

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உள்பட்ட கீழமட்டையான் கிராமத்தில் ஜெயமணிகுமரன் வயலில் பயிரிட்ட நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்த நெல் பயிா்கள் செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தன. இதுபற்றி தகவலறிந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலா் நாகராஜன் தலைமையிலான தீயணைப்பு மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்குச்

விரைந்து சென்று அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் கதிா்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனா். உரிய நேரத்தில் தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்ததால் அதிகமான நெல் பயிா்கள் காப்பாற்றப்பட்டதாக இந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.