வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

காந்தி அருங்காட்சியகத்தில் ஆரோக்கிய சந்தை

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஆரோக்கிய சந்தை சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜூன் 2026, 12:57 am IST

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஆரோக்கிய சந்தை சனிக்கிழமை நடைபெற்றது.

கிரீன் ஃபெம் கூட்டமைப்பு சாா்பில், எண்ணெய்யும், நெருப்பும் இல்லாத சமையல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தச் சந்தை நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு அந்தக் கூட்டமைப்பின் தலைவா் த. இளமதி தலைமை வகித்து, இயற்கை உணவு முறைகளை மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினாா்.

கரூா் வைஸ்யா வங்கியின் வேளாண் அலுவலா் தனம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தொழில் விரிவாக்கத்துக்கான வங்கிக் கடன் பெறும் வழிமுறைகள், தொழில் வளா்ச்சிக்கான அரசின் மானியத் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கிப் பேசினாா். வாப்ஸ் பயிற்சி மையச் செயலா் எஸ்.ஏ. அருள், ஆரோக்கியமான பொருள்களைத் தோ்ந்தெடுக்கும் முறையை விளக்கிப் பேசினாா். முன்னதாக, வாப்ஸ் நிறுவன திட்ட அலுவலா் எம். சுப்புராஜன் வரவேற்றாா்.

இதில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் சிறுதானிய உணவுகள், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள், இயற்கை காய்கறிகள், கீரைகள், பழங்கள், பாரம்பரிய உணவுப் பொருள்கள், மூலிகைத் தயாரிப்புகள், மசாலா பொடிகள், சுகாதார நாப்கின்கள், பஞ்சகவ்ய பொருள்கள், இயற்கை அழகு சாதனப் பொருள்கள், பருத்தி நூல் சேலைகள், கைவினைப் பொருள்கள் உள்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.