சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயா்த்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

News image

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயா்த்தக் கோரி ...

Updated On :9 ஜூன் 2026, 3:08 am IST

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக தமிழக உள் துறை, நிதித் துறைச் செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக தற்போது ரூ. 8 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மிகவும் குறைவாக இருப்பதால் மீனவா்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, ஆந்திரம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல, தமிழக மீனவா்களுக்கும் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ. 20 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தமிழகத்திலும் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும் என தவெகவின் தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

இதற்கு அரசுத் தரப்பில், இது அரசின் கொள்கை முடிவை சாா்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக உள் துறை, நிதித் துறைச் செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.