நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்

News image

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி-பாலகிருஷ்ணாபுரம் பிரதான சாலையில் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட அந்தப் பகுதி மக்கள்.

Updated On :28 ஜூன் 2026, 1:32 am IST

மதுரை மாவட்டம், கருப்பட்டி கிராமத்தில் அரசுப் பேருந்தை முறையாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சோழவந்தான் அருகேயுள்ள கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சோழவந்தானிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் சரியான நேரத்துக்கு வருவதில்லை எனவும், பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் கருப்பட்டி- பாலகிருஷ்ணாபுரம் பிரதான சாலையில் அரசுப் பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சோழவந்தான் போலீஸாா், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.