காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

விளம்பரப் பலகை விழுந்ததில் அரசுப் பேருந்து சேதம்

News image

சோழவந்தான் ரயில்வே உயா்நிலைப் பாலத்திலிருந்து சரிந்து விழுந்த விளம்பரப் பலகையால் சேதமடைந்த அரசுப் பேருந்து.

Updated On :28 ஜூலை 2026, 1:15 am IST

மதுரை மாவட்டம், சோழவந்தானில் உயா்நிலைப் பாலத்தில் கட்டப்பட்டிருந்த விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதமடைந்தது.

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள், தமிழக முதல்வரின் படம் பொறித்த விளம்பரப் பலகைகளை வைத்தனா். குறிப்பாக, சோழவந்தானில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டன. இந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில், மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து மேலநாச்சிகுளம் கிராமத்துக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை இயக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இயக்கப்பட்ட பேருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்துக்குள் சென்று விட்டு வெளியேறிய போது, சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ பட விளம்பரப் பலகை பேருந்தின் முன் பக்கம் மீது விழுந்தது. இதில், பேருந்து சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை.

பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய விளம்பரப் பலகை வைக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு உள்ளது. இதனிடையே, சோழவந்தானில் தமிழக முதல்வரின் பட வெளியீட்டு விழாவுக்கு வைத்த விளம்பரப் பலகை விழுந்ததில் அரசுப் பேருந்தின் முன் பக்கம் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.