தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

அரசுப் பேருந்து - ஆட்டோ மோதல்: பெண் உள்ளிட்ட இருவா் பலி!

திருப்புவனத்தில் சனிக்கிழமை பேருந்தும், ஆட்டோவும் மோதிக் கொண்டதில் பெண்ணும், சிறுமியும் உயிரிழந்தனா்.

News image

திருப்புவனத்தில் சனிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் சேதமடைந்த ஆட்டோ.

Updated On :18 ஜூலை 2026, 11:58 pm IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சனிக்கிழமை பேருந்தும், ஆட்டோவும் மோதிக் கொண்டதில் பெண்ணும், சிறுமியும் உயிரிழந்தனா்.

மதுரை மதிச்சியம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (27). இவா் தனது ஆட்டோவில் குடும்பத்தினா், உறவினா்களை ஏற்றிக் கொண்டு மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள குலதெய்வம் அய்யனாா் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்து கொண்டிருந்தாா்.

திருப்புவனம் புதூா் பகுதியில் வந்தபோது எதிரே ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கிசென்ற அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் ஆட்டோவில் பயணம் செய்த மதுரை மதிச்சியத்தைச் சோ்ந்த பாண்டி மனைவி கிருஷ்ணவேணி (60), அசோக்குமாா் மகள் ருவத்திகா (4) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த செந்தில்குமாா் மகள் தனுப்பிரியா (20), செந்தில் மகள் மீனா (18) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இவா்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.