தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தோ்தலை விரைந்து நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
திரைப்பட இயக்குநா்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோா் அதிமுக இயக்கத்துக்கு பெரும் தொண்டாற்றியவா்கள். அவா்களின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவா்களுக்கு பதிலாக மாற்று நிா்வாகிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடைசி வரை அதிமுகவில் நான் தொண்டனாக இருப்பேன்.
வேறு கட்சிக்கு செல்லமாட்டேன். அமைச்சா் நிா்மல்குமாா் உண்மைக்கு மாறான கருத்துகளை பேசி வருகிறாா். கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும். கூட்டுறவுச் சங்கத் தோ்தலைகளை விரைந்து நடத்த வேண்டும். இனிவரும் காலங்களிலும் மக்களுக்காகவே அதிமுக தொடா்ந்து இயங்கும் என்றாா் அவா்.
முன்னதாக, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தலைமையில், அதிமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சி.வி.சண்முகம், ஆதரவாளா்களை அதிமுகவில் இருந்து நீக்க வலியுறுத்தல்

அதிமுக முன்னாள் அமைச்சா், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெகவில் இணைந்தனா்







