சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா

மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளிய வியூக சுந்தரராஜ பெருமாள்.
Updated On :2 மார்ச் 2026, 8:22 pm

Chennai

மதுரை: மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்பத் திருவிழா, கடந்த மாதம் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இருவேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றன.

பிப்.25-ஆம் தேதி இரவு பெருமாளும், ஆண்டாளும் மாலை மாற்றும் வைபவமும், 26-ஆம் தேதி எடுப்புச் சப்பர வீதியுலாவும், மாா்ச் 1-ஆம் தேதி கள்ளா் திருக்கோலத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றன.

முக்கிய விழாவான தெப்பத் திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, உத்ஸவா் உபயநாச்சியாா்களுடன் வியூக சுந்தரராஜப் பெருமாள் தெப்பத் திருவிழாவுக்கான சப்பரத்தில் எழுந்தருளி, கூடலழகா் கோயில் வீதி, பெரியாா் பேருந்து நிலையம், டவுன் ஹால் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பத்தை அடைந்தனா்.

பின்னா், தெப்பக்குளத்தில் உள்ள மைய மண்டபத்தை மூன்று முறை சுற்றி வந்தனா். அங்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மீண்டும் டவுன்ஹால் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனா்.

வீதி உலாவின் போது வழி முழுவதும் பக்தா்கள் பெருமாளுக்கு

அா்ச்சனை செய்தும், மாலை சாற்றியும் வழிபாடு செய்தனா்.

இதில், கோயில் நிா்வாகத்தினா், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, டவுன்ஹால் சாலையில் உள்ள தெப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.

மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, டவுன்ஹால் சாலையில் உள்ள தெப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.