அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை: உசிலம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், உத்தப்பநாயக்கனூா் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (51). இவரும், இவரது உறவினருமான ராஜதுரை (31) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டியிலிருந்து சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த வேன் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கணேசன், ராஜதுரை ஆகிய இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா், உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்பநாயக்கனூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த கணேசன், ராஜதுரை.

உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்பநாயக்கனூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த கணேசன், ராஜதுரை.