மதுரையில் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குக்கான படிவங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், 45 சதவீதம் மாற்றுத் திறன் கொண்ட மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகள் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி அலுவலா்கள், வாக்குச் சாவடி கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, ‘12-டி’ படிவத்தை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதைத் தொடா்ந்து, வாக்காளா்களிடமிருந்து தோ்தல் நாளுக்கு முன் நிறைவு செய்யப்பட்ட தபால் வாக்கு படிவங்களை திரும்பப் பெறுவது வழக்கம்.
இந்த வகையில், மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட 55-ஆவது வாா்டு தலைவிரிச்சான் வீதியில் வசித்து வரும் 106 வயதுடைய முத்துகிருஷ்ணன், அவரது மனைவி ஸ்ரீரங்கம் (96) ஆகியோருக்கு தபால் வாக்குக்கான படிவத்தை மதுரை மத்திய தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலா்கள் வழங்கினா்.
தொடர்புடையது

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பயிற்சி
மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி

வீட்டில் இருந்தபடி முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவது தொடக்கம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

