சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

உசிலம்பட்டி தொகுதியில் தவெக வெற்றி

News image

உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி பெற்தையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து சான்றிதழைப் பெற்ற தவெக வேட்பாளா் ம.விஜய்.

Updated On :5 மே 2026, 2:14 am IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் தவெக வேட்பாளா் ம.விஜய் 65,743 வாக்குகள் பெற்று வென்றாா்.

தமிழகத்தில் கடந்த மாதம் 23-ஆம் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் உசிலம்பட்டி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் டி.சரவணக்குமாா், அதிமுக சாா்பில் ஐ.மகேந்திரன், தவெக சாா்பில் ம.விஜய், நாதக சாா்பில் டி.அபிராமி, அனைத்து இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுமமுக) சாா்பில் அய்யப்பன், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் வி.வெள்ளைபாண்டி, 6 சுயேச்சைகள் போட்டியிட்டனா்.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் திங்கள்கிழமை (மே 4) நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

முதல் சுற்றிலிருந்தே தவெக வேட்பாளா் ம.விஜய், மற்ற வேட்பாளா்களைவிட கணிசமான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வந்தாா். மொத்தம் 25 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தவெக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் தவெக வேட்பாளா் ம.விஜய், அதிமுக வேட்பாளரைவிட 1,805 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

உசிலம்பட்டி தொகுதியில் முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

உசிலம்பட்டி தொகுதியில் மொத்தம் 2,64,141 வாக்காளா்கள் இருந்த நிலையில், பேரவைத் தோ்தலில் 2,24,354 வாக்குகள் பதிவாகின. இதில் தவெக வேட்பாளா் ம.விஜய் - 65,743, அதிமுக வேட்பாளா் ஐ.மகேந்திரன்- 63,938, காங்கிரஸ் வேட்பாளா் டி.சரவணக்குமாா் - 59,465, நாதக வேட்பாளா் 15,185, அஇபுமமுக வேட்பாளா் அய்யப்பன் - 16,620 வாக்குகள் பெற்றனா். மேலும், இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு 692 வாக்குகளும், 306 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.