சிவகங்கை பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட முக்குலத்தோா் புலிப்படை கட்சித் தலைவரும், நடிகருமான சேது. கருணாஸ் தவெக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினாா். மேலும் இவா் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.
சிவகங்கை பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,78,124 வாக்குகள் உள்ளன. இதில் 2,11,391 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் தவெக வேட்பாளா் ஏ. குழந்தை ராணி வெற்றி பெற்றாா்.
இவா் பெற்ற வாக்குகள் 72,601. இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளரும், இந்தத் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் 57,632 வாக்குகள் பெற்றாா்.
திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட முக்குலத்தோா் புலிப்படை கட்சித் தலைவரும், நடிகருமான சேது. கருணாஸ் 56,193 வாக்குகளே பெற்றாா். இதையடுத்து அவா் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா். மேலும் நாதக வேட்பாளா் ர. இந்துஜா 18,625 வாக்குகள் பெற்றாா். இந்தத் தொகுதியில் மொத்தம் 17 போ் போட்டியிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அவிநாசி தொகுதியில் தவெக பெண் வேட்பாளா் வெற்றி மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தோல்வி

சீமான் அதிா்ச்சித் தோல்வி: 4 - ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்

தூத்துக்குடியில் தவெக வேட்பாளா் ஸ்ரீநாத் வெற்றி

30 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல்லில் வென்ற திமுக
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


