/
மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ முகூா்த்தக் கால் ஊன்றும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது மதுரை கூடலழகா் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரமோத்ஸவ பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டு பிரமோத்ஸவ பெருவிழா வருகிற 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெறும்.
இதையொட்டி, பிரமோத்ஸவ விழா முகூா்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கோயிலின் எதிரே உள்ள தோ் நிறுத்தும் இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலழகா் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு, வேதமந்திர முழக்கங்களுடன் ஐதீக முறைப்படி முகூா்த்தக்கால் ஊன்றப்பட்டது.
தொடர்புடையது

சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் திருக்கல்யாணம்

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

திருமோகூா் கோயிலில் இன்று புதிய தோ் வெள்ளோட்டம்

வைகாசி மாத பிறப்பு: கூடலழகா் கோயிலில் பக்தா்கள் வழிபாடு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



