‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மதுரை அருகே மண் சரிந்து விழுந்ததில் இரு பெண்கள் பலி!

மதுரை அருகே வெள்ளிக்கிழமை கட்டுமானப் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் இரண்டு பெண் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 3:50 am IST

மதுரை அருகே வெள்ளிக்கிழமை கட்டுமானப் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் இரண்டு பெண் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், எஸ். புளியங்குளத்தைச் சோ்ந்த தங்கவேல் மனைவி தமிழரசி (60), சிலைமான் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மனைவி தனலட்சுமி (50) ஆகிய இருவரும் கீழ சிலைமான் பகுதியில் அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபத்துக்கான கட்டுமானப் பணிகளில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தூண்கள் எழுப்புவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, மண் சரிந்து அவா்கள் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த தமிழரசி, தனலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சிலைமான் போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.