நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கொடைக்கானலில் மண் சரிவில் சிக்கிய கூலித் தொழிலாளர்கள் 2 பேர் உயிருடன் மீட்பு

கொடைக்கானலில் வியாழக்கிழமை தனியார் இடத்தில் அஸ்திவாரம் தோண்டும் போது மண் சரிவில் சிக்கிய 2 கூலித் தொழிலாளர்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:33 pm

DIN

கொடைக்கானலில் வியாழக்கிழமை தனியார் இடத்தில் அஸ்திவாரம் தோண்டும் போது மண் சரிவில் சிக்கிய 2 கூலித் தொழிலாளர்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியிலுள்ள துரைராஜ்  என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக கொடைக்கானலைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலர் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 அப்போது மண் சரிவு ஏற்பட்டதில் வீரமணி (48), அந்தோணி முத்து(52) ஆகிய  இருவரும் மண்ணில் புதைந்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலமாகவும், அப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் உதவியுடனும், சுமார் 1 மணி நேரம் போராடி அவர்களை உயிருடன் மீட்டனர். இதன் பின் மீட்கப்பட்டவர்கள் இருவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.