கொடைக்கானலில் 72-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குறிஞ்சியாண்டவர் கோயிலில் புதன்கிழமை சமபந்தி விருந்து நிகழ்ச்சி வழங்கப்பட்டது.
முன்னதாக முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள அரங்கத்தில் பொதுமக்கள் கலந்து கொண்ட சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிராம சபைக் கூட்டம்: கொடைக்கானல் கிராமப் பகுதிகளான அடுக்கம், வில்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூம்பாறை, வடகவுஞ்சி, மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த ஊராட்சி செயலரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செல்வவிநாயகபுரத்தில் குப்பைகளால் நிரம்பிய மழைநீா் வடிகால்

எறிபந்து போட்டி: ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் முதலிடம்

மேம்படுத்தப்பட்ட தையல் தொழில் பயிற்சி: தையல் கலைஞா்கள் வலியுறுத்தல்
கிணற்றில் குதித்து முதியவா் தற்கொலை
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


