பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.

Updated On :24 ஜூலை 2018, 1:06 am IST

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
           டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  
  இந்த வேலை நிறுத்ததிற்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி கமிஷன் ஏஜெண்ட் கடை உரிமையாளர்கள் நலச்சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், வியாபாரிகள், லாரி ஒட்டுநர்கள், கணக்காளர்கள், தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பில் புதன்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி கமிஷன் ஏஜெண்ட கடை உரிமையாளர்கள் நலச்சங்கத்தலைவர் கே.தங்கவேல் இதனைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.