ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கொடைக்கானல் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை

கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை பகுதியில் அடிப்படை வசதி கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மலைவாழ் மற்றும் ஆதிவாசி மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Updated On :14 மே 2018, 7:07 pm

கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை பகுதியில் அடிப்படை வசதி கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மலைவாழ் மற்றும் ஆதிவாசி மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளான பள்ளங்கி, கோம்பை, ஆலத்துரை, காமராஜர் நகர், அடிசரை, பெருங்காடு, கடல்கொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதை சரி செய்யவும், குடிநீர், மருத்துவ மற்றும் போக்குவரத்து வசதி கோரி அப்பகுதிகளைச் சேர்ந்த ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்கள் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலிருந்து ஊர்வலமாக ஆனந்தகிரி வழியாகச் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, எங்களுக்கு அடிப்படை வசதி செய்து தரா விட்டால் கோடை விழாவுக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டியும், பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சார்பில் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெறும் என்றனர்.
இதுபற்றி கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் கூறியதாவது:
இப்பகுதிகளுக்கு சுமார் ரூ.1 கோடி செலவில் சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைத்துக் கொடுப்பதற்காக டெண்டர் விடப்பட்டு பூஜையும் நடைபெற்றுள்ளது. பல்வேறு காரணங்களால் அப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் அப்பணி தொடங்க உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.