காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஊழல் செய்த தமிழக அமைச்சர்கள்  விரைவில் சிறைக்குச் செல்வர்: கர்நாடக அமமுக செயலர் புகழேந்தி பேட்டி

ஊழல் செய்த தமிழக அமைச்சர்கள் விரைவில் சிறைக்குச் செல்வார்கள் எனஅமமுக கர்நாடக மாநில செயலர் புகழேந்தி தெரிவித்தார்.

Published On :

ஊழல் செய்த தமிழக அமைச்சர்கள் விரைவில் சிறைக்குச் செல்வார்கள் எனஅமமுக கர்நாடக மாநில செயலர் புகழேந்தி தெரிவித்தார்.
கொடைக்கானலுக்கு புதன்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி மக்களிடத்தில் எடுபட வில்லை. தமிழக அமைச்சர்களின் ஊழல்பட்டியல் வெளிவந்து கொண்டிருக்கிறது. 
ஊழல் செய்த அமைச்சர்கள் விரைவில் சிறைக்குச் செல்வார்கள். தமிழகமுதல்வர் அணியினருக்கும், துணை முதல்வர் அணியினருக்கும் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் முதல்வராக வருவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருகிறார். இவர்களது பிரச்னையால் இவர்களை இயக்கி வருபவர்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.
தமிழக சட்டப் பேரவை உறுப்பினர்கள் 70 பேரும், அமைச்சர்கள் 10 பேரும் அமமுகவுக்கு வருவதற்கு தயாராக உள்ளனர். தமிழக இடைத் தேர்தலில் அமமுக போட்டியிட்டு  நிச்சயமாக வெற்றி பெறும். 
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நிலையாக இருக்காது விரைவில் கவிழும்.
 குட்கா ஊழல் குறித்து பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் பேசிவருவது தேவையில்லாதது. அமமுக இணைவது குறித்தோ அல்லது சேர்ப்பது குறித்தோ இதுவரை எந்த விதமான  பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தாலும் ஏற்க மாட்டோம். தமிழக மக்களே அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.