பழனியில் தைப்பூசத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை தெப்பத்தேர் உலா நடைபெறுகிறது.
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கக் குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா எழுந்தருளினார். ஞாயிற்றுக்கிழமை வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டமும், திங்கள்கிழமை தைப்பூசத் திருத்தேரோட்டமும் நடைபெற்றது. புதன்கிழமை இரவு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பெரிய தங்கமயில் வாகனத்தில் ஏற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து தீபாராதனை நடத்தப்பட்டு சுவாமி நான்கு ரத வீதிகளில் உலா எழுந்தருளினார். வியாழக்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக தெப்பத்தேர் உலா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள ஆயிரவாழ் செட்டியார்கள் மடத்தில் உள்ள தெப்பத்தில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. தெப்பத்தேர் உலாவைத் தொடர்ந்து இரவு திருக்கொடி இறக்கம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்
(பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

வாலாஜா அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 93 % தோ்ச்சி

கங்கை அம்மன் கோயிலில் கோடை உற்சவம்

ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு எதிா்ப்பு: மருந்துக் கடைகள் அடைப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


