பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் நன்றி தெரிவித்தார்.
பஞ்சாபில் உள்ள 8 மாநகராட்சிகள், 75 நகராட்சிகள் மற்றும் 20 நகர பஞ்சாயத்துகளுக்கு கடந்த மே 26-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரிடையே கடும் போட்டி நிலவியது. இதனிடையே ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது.
இதுதொடர்பாக கேஜரிவால் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குகளை அளித்த பஞ்சாப் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பஞ்சாபின் நகர்ப்புறங்களில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற பிரம்மாண்டமான வெற்றிக்காக, பஞ்சாப் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குகளை அளித்ததன் மூலம், பகவந்த் மான் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை மக்கள் பாராட்டியுள்ளனர் என்று அவர் கூறினார்.
எதிர்காலத்திலும் இதேபோன்று நாங்கள் தொடர்ந்து நல்ல பணிகளைச் செய்வோம். பாஜக இப்போது துடைத்தெறியப்பட்டுவிட்டது. பஞ்சாபில் உள்ள சிறு வணிகர்கள் மீது பலமுறை சோதனைகளை நடத்தி மக்களைத் துன்புறுத்திய கட்சி'க்கு, இன்று மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
பஞ்சாபில் நடைபெற்ற நகரப் பஞ்சாயத்துத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 246 வார்டுகளில் 105 வார்டுகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. அதேவேளையில், நகராட்சி மன்றங்களுக்கான முடிவுகளில், அறிவிக்கப்பட்ட 1,272 வார்டுகளில் 630 வார்டுகளை வென்று ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது.
Summary
Aam Aadmi Party (AAP) national convener Arvind Kejriwal, on Friday, in a veiled attack at the Bhartiya Janata Party, said that the "ED Party, which harassed people by conducting raids on small traders in Punjab," has been wiped out.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணி வெற்றி பெறும்: வைகோ

அமலாக்கத் துறையைக் கண்டு கேஜரிவாலுக்கு அச்சம்: வீரேந்திர சச்தேவா

பாஜகவை போல் ஆம் ஆத்மி கட்சியும் மலிவான அரசியல்: தேவேந்தா் யாதவ் சாடல்







