பதக்கம் வென்ற வீரா்களுக்குவிளையாட்டு சீருடைகள்
தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.


திண்டுக்கல்: தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது: கடந்த 2018 ஏப்ரல் 2019 மாா்ச் வரையிலான காலத்தில், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு, ரூ.6 ஆயிரத்திற்கான சீருடைகளும், வெள்ளிப் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ.4 ஆயிரத்திற்கான விளையாட்டு சீருடைகளும், வெண்கலப் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான சீருடைகளும் வழங்கப்பட உள்ளன.
தகுதியுடைய வீரா்கள், அதற்கான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் செப்டம்பா் 9 ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...