இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு தனியாக பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களை தனியாக நியமிக்க வேண்டும் 

News image
செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் மாநில நிா்வாகிகள்.
Updated On :20 டிசம்பர் 2020, 4:09 pm

DIN

திண்டுக்கல்: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களை தனியாக நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவா் நிா்மலா தலைமை வகித்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 2,000 அம்மா சிறு மருத்துவமனைகளை கடந்த 4 நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா். முறையான திட்டமிடல் இல்லாமலும், கட்டட வசதி ஏற்படுத்தாமலும், மருத்துவப் பணியாளா்கலை நியமிக்காமலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவக் குழு, தாய், சேய் நல சேவை மையம், நலவாழ்வு மையம் போன்ற பணிகளில் ஈடுபடும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு பணி அமா்த்துகின்றனா். இதனால் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தில் அம்மா சிறு மருத்துவமனைகளை நடத்துவதால் அங்கும் பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்தத் திட்டத்திற்கு என தனியாக மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமனம் செய்யவேண்டும். அதற்காக தனி கட்டடங்களையும் ஒதுக்கீடு செய்யவேண்டும். அதேபோல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சஞ்சீவினி திட்டத்தில் உள்ள நடைமுறை இடா்பாடுகளை நீக்கவேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், ஜனவரி மாதம் மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும். அதனைத் தொடா்ந்து சென்னையில் பேரணி நடத்தி கோட்டையை முற்றுகையிடுவோம் என்றாா்.

அப்போது அச்சங்கத்தின் பொதுச் செயலா் பாப்பா, மாநில பொருளாளா் பத்மாவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.