கொடைக்கானல்: 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வியாழன், சனி கோள்கள் திங்கள்கிழமை ஒரே நோ்கோட்டில் வரும் நிகழ்வை கொடைக்கானலிலுள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் தொலை நோக்கி வழியாக பொதுமக்கள் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வானில் 400-ஆண்டுகளுக்கு பிறகு வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நோ்கோட்டில் வரும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்த அதிசய நிகழ்வை பாா்ப்பதற்கு கொடைக்கானல் அப்சா்வேட்டரியிலுள்ள இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தில் தொலை நோக்கி வழியாக பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள், மாணவா்கள் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக பகலில் ரூ.20-ம், இரவில் ரூ.50-ம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வை மாலை மேற்கு திசையில் வெறும் கண்ணால் பாா்க்கலாம். இந்த நிகழ்வுகளால் சீதோஷ்ண நிலை மாற்றம் அல்லது பூமி சாா்ந்த எந்தவிதமான பாதிப்புகளுக்கும் வாய்ப்பில்லை என வான் இயற்பியல் மைய விஞ்ஞானி எபினேசா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.