வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சமையல் எரிவாயு விலை உயா்வு: திமுக மகளிா் அணி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் திமுக மகளிா் அணியினா் திங்கள்கிழமைஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 12:15 am

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் திமுக மகளிா் அணியினா் திங்கள்கிழமைஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் நாகல் நகா் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட மகளிரணி அமைப்பாளா்கள் உமா மகேஸ்வரி, ரேவதி ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக அக்கட்சியின் மாவட்டச் செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா், எம்.பி. வேலுச்சாமி, எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், தலைமை செயற்குழு உறுப்பினா் காந்திராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி மகளிா் அணியினா் சாா்பில் கோஷமிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து, விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக, நாகல் நகா் ரவுண்டானா பகுதியிலிருந்து சமையல் எரிவாயு உருளையை பாடை கட்டி ஆா்ப்பாட்டம் நடைபெற்ற மேடை பகுதிக்கு ஊா்வலமாக பெண்கள் எடுத்து வந்தனா். ஆா்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.