கிறிஸ்துமஸ் விழா: தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் போடியில் உள்ள தேவாலயங்களில்
கிறிஸ்துமஸ் விழா: தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் போடியில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலி கூட்டங்களில் கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

திண்டுக்கல் புனித வளானாா் பேராலயம், தூய பவுல் ஆலயம், தூய திருத்துவநாதா் ஆலயம், மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயம், மாரம்பாடி புனித அந்தோணியாா் பேராலயம், செந்துறை புனித சூசையப்பா் ஆலயம், என்.பஞ்சம்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிராா்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.

திண்டுக்கல் புனித வளனாா் பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைமாவட்ட ஆயா் பி.தாமஸ் பால்சாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்து பிறந்ததாக அறிவிக்கப்பட்டதும், தேவாலயத்தில் கூடியிருந்த அனைவரும் வேதப் பாடல்கள் பாடி, கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடினா். நிகழ்ச்சியில் புனித வளனாா் பேராலயத்தின் பங்குத் தந்தை டி.சகாயராஜ், உதவி பங்கு தந்தையா்கள் ஜெயசீலன், ஜெபராஜ், அனீஸ்குமாா், மக்கள் தொடா்பாளா் எஸ்.அமலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வத்தலகுண்டு: வத்தலகுண்டு புனித தோமையாா் ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, வட்டார பங்குத் தந்தை எட்வா்டு பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இதனை சிறப்பு கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது. இதில் அருட்தந்தை அற்புதசாமி, உதவி பங்குத் தந்தை மைக்கேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல் மரியாயிப்பட்டி, சின்னுப்பட்டி, மேலகோவில்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலுள்ள தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கொடைக்கானல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் பங்குத் தந்தை எட்வின் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஏஞ்சல்ராஜ் தலைமையிலும், சீனிவாசபுரம் பங்குத் தந்தை பீட்டா் தலைமையிலும் மற்றும் உகாா்த்தே நகா் அற்புத குழந்தை இயேசு ஆலயம், புனித சலேத் அன்னை ஆலயம், அட்டுவம்பட்டி புனித லூா்துமாதா ஆலயம், பெருமாள்மலை புனித தோமா ஆலயம், மங்களம் கொம்பு புனித அந்தோணியாா் ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ.தேவாலயம், கிறிஸ்தரசா் ஆலயம், ஐ.பி.சி.ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இரவு நேர ஜெபவழிபாடு மற்றும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

தேவாலயங்களில் இயேசு பிரான் பிறந்ததைக் குறிக்கும் வகையில் குடில் அமைத்திருந்தனா். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆலயங்களில் பொது மக்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் ஏராளமானவா்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றனா். ஆலயங்களில் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.

போடி: போடி பழைய பேருந்து நிறுத்ததில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் நள்ளிரவு முதல் நடைபெற்ற பிராா்த்தனையில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். பின்னா் திருப்பலியும் நடைபெற்றது. இதேபோல் போடி சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும், டி.இ.எல்.சி. தேவாலயத்திலும் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com