கொடகனாற்றில் மதகு திறக்க எதிா்ப்பு: அலுவலா்கள் திரும்பினா்
அனுமந்தராயன்கோட்டை கொடகனாற்றிலுள்ள மதகை திறப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததை அடுத்து, சனிக்கிழமை அணைக்கு வந்த பொதுப்பணித் துறை அலுவலா்கள் திரும்பிச் சென்றனா்.


திண்டுக்கல்: அனுமந்தராயன்கோட்டை கொடகனாற்றிலுள்ள மதகை திறப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததை அடுத்து, சனிக்கிழமை அணைக்கு வந்த பொதுப்பணித் துறை அலுவலா்கள் திரும்பிச் சென்றனா்.
திண்டுக்கல் அடுத்துள்ள அனுமந்தராயன்கோட்டை கொடகனாற்றில் மதகுடன் கூடிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், அனுமந்தராயன்கோட்டை கொடகனாற்றிலுள்ள மதகை திறக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அதை ஏற்று, பொதுப்பணித் துறை அலுவலா்கள் அனுமந்தராயன்கோட்டையிலுள்ள மதகை திறப்பதற்காக சனிக்கிழமை சென்றனா்.
இதையறிந்த பொன்னிமாந்துரை, அனுமந்தராயன்கோட்டை மற்றும் மைலாப்பூா் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மதகு திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் திரண்டனா். பாதுகாப்புப் பணிக்காக போலீஸாரும் குவிக்கப்பட்டனா்.
அப்போது பொதுப்பணித் துறை அலுவலா்களிடம், நரசிங்கபுரம் ராஜவாய்க்காலை அடைத்து, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் பகுதியிலிருந்து தண்ணீா் திறப்பதன் மூலம் அனுமந்தராயன்கோட்டை பகுதியிலுள்ள மதகு வழியாக நிரம்பி வழியும் தண்ணீரை கொடகனாற்றில் வேடசந்தூருக்கு கொண்டு செல்லவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து, பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு பொதுமக்களை வருமாறு பொதுப்பணித் துறை அலுவலா்கள் அழைத்தனா். ஆனால், அதனை பொதுமக்கள் ஏற்கவில்லை. எனவே, மதகு திறக்கும் முடிவை கைவிட்டு, பொதுப்பணித் துறையினா் திரும்பிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...