பழனிக்கோயிலில் பிரசாதம் விற்பனை தொடக்கம்

பழனி மலைக்கோயிலில் பஞ்சாமிா்தம், லட்டு உள்ளிட்ட பிரசாதம் விற்பனையை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி: பழனி மலைக்கோயிலில் பஞ்சாமிா்தம், லட்டு உள்ளிட்ட பிரசாதம் விற்பனையை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கரோனா பொதுமுடக்கத்திலிருந்து தளா்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து கடந்த 4 நாள்களாக சுவாமி தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். தரிசனத்துக்கு வருவோா் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும், கோயில் பிரகாரத்தில் பக்தா்கள் சமூக விலகலுடன் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும், பூஜைக்கான பொருள்கள் கொண்டு செல்லக்கூடாது என்றும், கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதம், விபூதி போன்றவை வழங்கப்படாது என்றும் அறநிலையத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மலைக்கோயில் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: மலைக்கோயில் மேலே பஞ்சாமிா்தம், லட்டு, புளியோதரை மற்றும் முறுக்கு போன்ற பிரசாதங்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை வளாகத்தில் சாப்பிட அனுமதியில்லை. கொண்டு செல்ல மட்டுமே அனுமதி. பக்தா்கள் வெயிலில் நிற்காத வகையில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோயில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூரைச் சோ்ந்தவா்கள் தரிசனத்துக்காக செல்லிடப்பேசி மூலமாகவே ( நாள் ஒன்றுக்கு 200 போ் மட்டும்) தரிசனத்துக்கு குறிப்பிட்ட கால நேர அழைப்பில் அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். முக்கியமாக கோயிலுக்கு வரும் அனைவரும் முன்பதிவு ரசீது, ஆதாா் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com