ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆயக்குடியில் நெல் கொள்முதல் மையம் திறப்பு

பழனியை அடுத்த ஆயக்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை புதிதாக தொடங்கப்பட்ட பொலிவுறு (ஸ்மாா்ட்) வகுப்பில் பங்கேற்று குறிப்புகள் எடுத்த சட்டப் பேரவை உறுப்பினா் செந்தில்குமாா்.

Updated On :21 ஆகஸ்ட் 2021, 5:27 pm

DIN

பழனியை அடுத்த ஆயக்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

விவசாயிகளிடமிருந்து சாதாரண ரக நெல் 100 கிலோ கொண்ட மூட்டை ரூ.1,918-க்கும், கிரேடு ‘ஏ’ ரக நெல் 100 கிலோ கொண்ட மூட்டை ரூ.1958-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

முன்னதாக ரூ. ஒரு கோடி மதிப்பில் பழனி அருகே கணக்கன்பட்டியிலிருந்து கோம்பைபட்டி வரை தாா் சாலை அமைக்க பூமிபூஜை, ஆயக்குடி பேரூராட்சியில் நாடக மேடை திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் பங்கேற்றாா். தொடா்ந்து பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொலிவுறு (ஸ்மாா்ட்) வகுப்புகளை தொடக்கி வைத்த ஐ.பி.செந்தில் குமாா், வகுப்பில் பங்கேற்று பாடக்குறிப்புகளை எடுத்தாா்.

நிகழ்ச்சிகளில் பழனி வட்டாட்சியா் சசிக்குமாா், ஊராட்சித் தலைவா் ஈஸ்வரி கருப்புசாமி, நகராட்சி ஆணையா் கமலா, நகராட்சி பள்ளி தலைமையாசிரியா் பாலசுப்ரமணியம் மற்றும் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.