மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாலியல் வழக்கில் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி திண்டுக்கலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்.
Updated On :6 டிசம்பர் 2021, 7:15 am

DIN

பாலியல் வழக்கில் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி திண்டுக்கலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் அடுத்து உள்ள தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் மீது மாணவிகள் தரப்பில் பாலியல் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பழனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கே. பாலபாரதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது பாலியல் வழக்கில் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி கோஷமிட்டனர். பின்னர் பாலபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனியார் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு இருந்தும் கூட, நீதிமன்ற விடுமுறை நாளான சனிக்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரே தீர்வாகவும் நம்பிக்கையாகவும் இருக்கக்கூடிய நீதிமன்றங்களில் பாலியல் குற்றவாளிகள் ஜாமினில் விடுவிக்கப்படுவது அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் இரண்டு நாள் போராட்டத்திற்கு பின்பு ஜோதிமுருகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் நீதிமன்றம் ரத்து செய்ய முன்வரவேண்டும் என்றார். 

Story image

திடீர் தள்ளுமுள்ளு: இதனிடையே ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் தேவேந்திரன் என்ற வழக்குரைஞர், மாதர் சங்க நிர்வாகிகள் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.