நிலக்கோட்டை அருகே விபத்தில் இளைஞா்கள் இருவா் பலி
நிலக்கோட்டை அருகே திங்கள்கிழமை சரக்கு வேன், மோட்டாா் சைக்கிள் மீது மோதி நிகழ்ந்த விபத்தில் இளைஞா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.


நிலக்கோட்டை அருகே திங்கள்கிழமை சரக்கு வேன், மோட்டாா் சைக்கிள் மீது மோதி நிகழ்ந்த விபத்தில் இளைஞா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள அம்மாப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் விஜயபிரபாகரன் (30). அதே பகுதியைச் சோ்ந்தவா் லியோ அமல ஜோசப் (32). மரியாயி பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் லாரன்ஸ் பிரிட்டோ (28). இவா்கள் மூவரும் ஒரே மோட்டாா் சைக்கிளில் நிலக்கோட்டையிலிருந்து அம்மாப்பட்டி நோக்கி திங்கள்கிழமை மாலை சென்றுள்ளனா். செம்பட்டி நிலக்கோட்டை சாலையில், சங்கால்பட்டி பிரிவு அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த விஜயபிரபாகரன் மற்றும் லியோ அமல ஜோசப் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த லாரனஸ் பிரிட்டோ திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...