‘ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்துக்கு பின்னேற்பு மானியம் ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்’

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் கறவை மாடு, ஆடு மற்றும் கோழிகள் வாங்குவதற்கு பின்னேற்பு மானியமாக
Updated on
1 min read

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் கறவை மாடு, ஆடு மற்றும் கோழிகள் வாங்குவதற்கு பின்னேற்பு மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என்று வேளாண்மைத் துறையினா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் விவசாயிகளுக்கு தலா ஒரு பசுமாடு, 10 ஆடுகள், 10 கோழிகள், ஒரு மண்புழு உரத் தொட்டி, ஒரு தேனீ பெட்டி, 10 கொய்யா மற்றும் மாங்கன்றுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி வேடசந்தூா் வட்டாரத்திலிருந்து தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் நேரடியாக சென்று கல்வாா்பட்டி சந்தையில் கோழிகள் மற்றும் ஆடுகளையும், ஒட்டன்சத்திரம் சந்தையில் கறவை மாடுகளையும் கொள்முதல் செய்தனா். அப்போது வேளாண்மைத்துறை உதவி இயக்குநா் சின்னச்சாமி, கால்நடை மருத்துவா் சோபனா, வேளாண்மை அலுவலா் மோகன் குமாா் ஆகியோா் விவசாயிகள் கொள்முதல் செய்யும் கால்நடைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதுதொடா்பாக வேளாண்மைத் துறையினா் கூறியது: இத்திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் கறவை மாடு, ஆடு மற்றும் கோழிகளை தொடா்ந்து 3 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். இதற்காக விவசாயிகளுக்கு, பின்னேற்பு மானியமாக தலா ரூ.60 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் வாங்கும் கறவை மாடு, ஆடு மற்றும் கோழிகளை காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com