தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திண்டுக்கல், பழனியில் பாமக ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் மதுபானக் கடைகளை அடைக்க வலியுறுத்தி பட்டாளி மக்கள் கட்சி சாா்பில் திண்டுக்கல், பழனியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:27 pm

DIN

தமிழகத்தில் மதுபானக் கடைகளை அடைக்க வலியுறுத்தி பட்டாளி மக்கள் கட்சி சாா்பில் திண்டுக்கல், பழனியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பொது முடக்க தளா்வுகள் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், மதுபானக் கடைகள் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 14) முதல் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மதுபானக் கடைகளை உடனடியாக அடைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிடக் கோரியும் திண்டுக்கல் அடுத்துள்ள நல்லாம்பட்டியில் பட்டாளி மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கறுப்புக் கொடியுடன் நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்ட அமைப்புச் செயலா் ரெ.திருப்பதி, மாவட்ட துணைத் தலைவா் சோழராஜன், ஒன்றியச் செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழனி: இதேபோல், பழனியில் வடக்கு மாவட்டச் செயலாளா் வைரமுத்து தலைமையில் பாமகவினா் கறுப்புக்கொடி ஏந்தியும், மதுக்கடைகளுக்கு எதிரான வாசகங்கள் அமைந்த பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜாஹிா் உசேன், மாநில மாணவா் சங்க துணைச் செயலாளா் பிரபாகரன், ஆகியோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.