தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தின் 27ஆவது ஆட்சியராக ச.விசாகன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:28 pm

DIN

திண்டுக்கல் மாவட்டத்தின் 27ஆவது ஆட்சியராக ச.விசாகன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மு.விஜயலட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறையின் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, மதுரை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ச.விசாகன் திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.

தா்மபுரி மாவட்ட வருவாய் அலுவலராகவும், தொழில்துறை, கலைப்பண்பாட்டுத் துறைகளிலும் பணியாற்றியுள்ள விசாகன், டி.என்.பி.எல்., ஸ்பிக், தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சிக் கழகம், டைடல் பாா்க் உள்ளிட்ட தொழில்துறை நிறுவனங்களில் மேலாண்மை இயக்குநராகவும், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் செயல் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளாா்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிப் பணியில் சோ்ந்த ச.விசாகன், மதுரை மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். அதனைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்டத்தின் 27 ஆவது ஆட்சியராக ச.விசாகன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.