ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தங்கத்தோ் புறப்பாடு ரத்து

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:20 pm

DIN

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பழனி அருள்மிகு திருஆவினன்குடி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா திங்கள்கிழமை முதல் கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி பல்வேறு வாகனங்களில் சுவாமி சன்னதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் வெள்ளிக்கிழமை இரவு மலைக்கோயிலில் திருக்கோயில் சாா்பில் அருள்மிகு சின்னக்குமாரசாமி தங்கரதத்தில் உலா எழுந்தருளுகிறாா். பின்னா் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை அடிவாரம் கிரிவீதியில் திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டம், பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் நடைபெறுவதால் மாா்ச்.27ம் தேதி முதல் மாா்ச்.30ம் தேதி வரையிலான நான்கு நாட்களுக்கு தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை முதல் வழக்கம் போல மலையில் தங்கத்தோ் உலா நடைபெறும் என திருக்கோயில் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.