தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சட்ட விழிப்புணா்வு முகாம்

நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நத்தம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி கலையரசி ரீனா தலைமை வகித்தாா். நத்தம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சேக் சிக்கந்தா் பாட்ஷா, செயலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், போக்சோ சட்டம், குழந்தை திருமணம், அதற்கான தண்டனைகள், 18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டினால் விதிக்கப்படும் தண்டனைகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் ஜேசுதாஸ், வழக்குரைஞா்கள், காவல் துறையினா், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.