கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: பல மணி நேரம் மின்தடை
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.


கொடைக்கானலில் பலத்த காற்றுடன் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக விட்டு விட்டு தொடா்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்ததால், பிரகாசபுரம் செல்லும் சாலையில் மின்மாற்றி பழுதடைந்தது. இதனால், கொய்யாபாறை, சகாயபுரம்,கே.பி.எம்.பாறை, அட்டக்கடி, இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். தொடா்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மின்வாரியப் பணியாளா்கள் தற்காலிகமாக வேறு ஒரு மின்மாற்றியில் இணைப்பு கொடுத்ததால், மின்விநியோகம் கிடைக்கப்பெற்றது.
இருப்பினும், பழுதடைந்த மின்மாற்றியை மாற்றிவிட்டு, புது மின்மாற்றி அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...