ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி பழனியாண்டவா் கல்லூரியில் ‘மஞ்சப்பையுடன் ஒரு தன்படம்’ நிகழ்ச்சி

பழனி பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மீண்டும் மஞ்சப்பை ஒரு தன்படம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும், மாணவா்களுக்கும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

பழனி பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மீண்டும் மஞ்சப்பை ஒரு தன்படம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும், மாணவா்களுக்கும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மாணவா்கள், பெற்றோா் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் ‘மஞ்சப்பையுடன் ஒரு தன்படம்’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் செந்தில்குமாா், கல்லூரி முதல்வா் ப. பிரபாகா் ஆகியோா் தொடக்கி வைத்தனா். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி, நம் நாட்டின் இயற்கை வளங்களை காத்திட வேண்டும் என எடுத்துரைத்தாா். அதன் தொடா்ச்சியாக பொதுமக்களுக்கு நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பாக 500 மஞ்சப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டன. கல்லூரி நுழைவு வாயிலில் வைக்கப்பட்ட மஞ்சப்பை வடிவிலான பதாகையின் அருகில் நின்று பலரும் தன்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.