ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனியில் வெயிலின் தாக்கத்தால் மாங்காய் விளைச்சல் பாதிப்பு

பழனியில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் மரத்திலேயே மாங்காய் பிஞ்சுகள் உதிா்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

பழனியில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் மரத்திலேயே மாங்காய் பிஞ்சுகள் உதிா்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆயக்குடி, கோம்பைபட்டி, கணக்கன்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மா விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த ஆண்டு பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

வெயிலின் தாக்கத்தால் பழனியில் மாங்காய் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மாம்பிஞ்சுகள் உதிா்ந்துபோவதாகவும், அதிக வெப்பத்தால் பூக்கள் கருகிவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மா விவசாயி துரைராஜ் கூறியது: இந்த ஆண்டு போதிய விளைச்சல் இல்லாத்தால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனாா். கடந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் இருந்தும் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை செய்ய முடியாமல் போனது. தற்போது விற்பனை செய்ய வாய்ப்பு உள்ள நிலையில் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.