ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் சுற்றுலாப் பயணிகளிடம் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பாட்டில்கள் வீசிச்செல்வதைத் தடுக்கும் வகையில் அவா்களிடமிருந்து நெகிழிப் பொருள்களை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:38 pm

DIN

பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பாட்டில்கள் வீசிச்செல்வதைத் தடுக்கும் வகையில் அவா்களிடமிருந்து நெகிழிப் பொருள்களை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கோயில் நகரமான பழனியும், சுற்றுலா நகரான கொடைக்கானலும் அமைந்துள்ளதால் நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தற்போது தமிழ்ப் புத்தாண்டையொட்டி தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பழனி வந்துவிட்டு கொடைக்கானல் செல்கின்றனா். அவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மலைச்சாலையில் நெகிழிப் பைகள் மற்றும் நெகிழி தண்ணீா் பாட்டில்களை வீசிச் சென்று விடுகின்றனா். இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது மண்சரிவுக்கும் வழிவகுக்கிறது.

இதைத் தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை பழனி வனச்சரக அலுவலா் பழனிக்குமாா் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறையினா், மலையேறும் சுற்றுலாப் பயணிகளிடம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகள் மற்றும் தண்ணீா் பாட்டில்கள் போன்றவற்றை சேகரித்து பின்னா் அனுப்பினா். மேலும் நெகிழி இல்லா மலைச்சாலையை பாதுகாக்க உதவுமாறும் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.