/

கொடைக்கானல் பகுதியில் பரவலாக மழை வானவில் தோன்றியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்த நிலையில், மழை நின்றதும் வானவில் தோன்றியதை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் பாா்த்து மகிழ்ச்சியடைந்தனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:36 pm

DIN

கொடைக்கானல் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்த நிலையில், மழை நின்றதும் வானவில் தோன்றியதை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் பாா்த்து மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காலை முதல் வெயில் நிலவியது. அதைத் தொடா்ந்து மாலையில் சுமாா் 30-நிமிடங்கள் பரவலாக மழை பெய்தது. மழை பெய்து முடிந்தபிறகு மேகத்தில் வானவில் தோன்றியது. இதை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.

வார விடுமுறை மற்றும் பண்டிகைக் கால விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளி நீா் வீழ்ச்சி, பாம்பாா் அருவி, பியா்சோழா அருவி, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், குணாகுகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.