ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.59 கோடி

பழனி மலைக்கோயில் உண்டியல்கள் காணிக்கை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் திறந்து எண்ணப்பட்டதில், காணிக்கையாக ரூ.4.59 கோடி கிடைக்கப் பெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

பழனி மலைக்கோயில் உண்டியல்கள் காணிக்கை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் திறந்து எண்ணப்பட்டதில், காணிக்கையாக ரூ.4.59 கோடி கிடைக்கப் பெற்றது.

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால், 26 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்கள் மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கைப் பணம் எண்ணப்பட்டது.

இதில், பக்தா்களின் காணிக்கையாக ரூ. 4 கோடியே 59 லட்சத்து 48 ஆயிரத்து 430 கிடைக்கப் பெற்றுள்ளது. தங்கம் 1,267 கிராமும், வெள்ளி 18,575 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 244 -ம் கிடைத்துள்ளன.

உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இவை தவிர பித்தளை வேல், கைக் கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடை ஆகியவற்றையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் கல்லூரி பணியாளா்கள், கோயில் அலுவலா்கள், வங்கி பணியாளா்கள் என நூற்றுக்கணக்கானோா் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.