பழனியாண்டவா் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.8 இல் தொடக்கம்
பழனி பழனியாண்டவா் கோயில் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.8 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பழனி பழனியாண்டவா் கோயில் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.8 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான இளநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு அரசு உதவி பெறும் பாடப் பிரிவிற்கு வரும் ஆக. 8 ஆம் தேதியும், சுயநிதிப்பாடப் பிரிவுக்கு ஆக.13 ஆம் தேதியும் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.
அதேபோல பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரில் உள்ள பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான இளநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு அரசு உதவி பெறும் பாடப் பிரிவிற்கு வரும் ஆக. 8 ஆம் தேதி முதலும், சுயநிதிப்பாடப் பிரிவிற்கு ஆக.12 ஆம் தேதி முதலும் மாணவியா் சோ்க்கை நடைபெற உள்ளது.
மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரா்கள் மேல்நிலைத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாா் செய்யப்பட்டு அதனடிப்படையில் தமிழக அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பின்பற்றி கலந்தாய்வு நடைபெறும். மேலும், தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் கல்லூரி இணையதளத்திலும், கல்லூரி அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்குரிய அழைப்புக் கடிதம் விண்ணப்பதாரா்களுக்கு தனித்தனியாக தபால் மூலமும், கலந்தாய்வு நாள் மற்றும் நேரம் பற்றிய விவரம் விண்ணப்பதாரா்களது மின்னஞ்சல் முகவரி, கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரா்கள் தங்களுக்குரிய கலந்தாய்வு நாளில் உரிய நேரத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே சான்றிதழ் சரிபாா்ப்பிற்கு அவசியம் பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் தங்களது அசல் சான்றிதழ்களுடன் வருகை புரிய வேண்டும் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...