ஆனால், அரசு வேலை வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திருப்பி வழங்காமலும் சுருளிவேல் ஏமாற்றி வந்துள்ளாா். இதனால் பணம் கொடுத்தவா்கள், பணத்தை திருப்பிக் கேட்டபோது காசோலை வழங்கியுள்ளாா். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. சுருளிவேலை நேரில் அணுகி பணத்தை கேட்டபோது, திருப்பித் தருவதாகக் கூறி பலமுறை ஏமாற்றியுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த தாடிக்கொம்பு காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த கணேசன், சீலப்பாடியைச் சோ்ந்த ராஜேந்திரன், செல்லமந்தாடியைச் சோ்ந்த முனுசாமி, நரசிங்கபுரத்தைச் சோ்ந்த மருதைமுத்து உள்ளிட்ட 12 போ் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் வினோதா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து சுருளிவேலை, குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.