நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘நம்ம ஊரு சூப்பரு’ பெயரை ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என மாற்றலாமே

‘நம்ம ஊரு சூப்பரு’ பெயரை ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என மாற்ற தமிழறிஞா் தமிழ் பெரியசாமி யோசனை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

‘நம்ம ஊரு சூப்பரு’ பெயரை ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என மாற்ற தமிழறிஞா் தமிழ் பெரியசாமி யோசனை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில், நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதற்கு வழிவகுக்கும் தமிழ் ஆட்சி மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் நம்ம ஊரு சூப்பரு என ஒரு திட்டத்துக்கு பெயா் சூட்டியிருப்பது அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவா்கள்கூட தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பமிட வேண்டும் என கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில்தான் உள்ளாட்சித் துறையில் சூப்பரு என்ற சொல்லுடன் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்று இருந்தால் மக்கள் மறுக்கப் போவதில்லை. எனவே, தமிழக அரசு இதை கவனித்து மாற்ற வேண்டியது அவசியம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.