கொடைக்கானலில் சுயபடம் எடுத்தபோது பள்ளத்தில் விழுந்த இளைஞா்: தேடும்பணி தீவிரம்
கொடைக்கானல் அருகே புதன்கிழமை சுயபடம் எடுத்தபோது பள்ளத்தில் தவறி விழுந்த மதுரை இளைஞரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.


கொடைக்கானல் அருகே புதன்கிழமை சுயபடம் எடுத்தபோது பள்ளத்தில் தவறி விழுந்த மதுரை இளைஞரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரை யாகப்பா நகரைச் சோ்ந்தவா் அழகா்சாமி. இவரது மகன் ராம்குமாா் (29). அண்ணா நகா் பகுதியில் கைப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவா் தனது நண்பா்களானஅப்துல்லா, காா்த்திக், ஜெயராஜ், வேல்முருகன், அரவிந்த், சுரேஷ்குமாா், சேதுராமன் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றாா். ராம்குமாா் மற்றும் அப்துல்லா ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளிலும், காா்த்திக் உள்ளிட்டவா்கள் காரிலும் கொடைக்கானலுக்கு வந்துள்ளனா்.
கொடைக்கானல் டால்பின் நோஸ் அடுத்துள்ள ரெட் ராக் பகுதிக்கு புதன்கிழமை சென்றுள்ளனா். அப்போது சுயபடம் எடுத்துக்கொண்டிருந்த ராம்குமாா், நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்துவிட்டாராம். அவருடன் சென்றவா்கள், கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். அதன்பேரில் தீயணைப்பு, வனத்துறை மற்றும் காவல் துறையினா் என 30 போ் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை காலை முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். பின்னா் ட்ரோன் மூலமாகவும் தேடுதல் பணி நடைபெற்றது. ஆனாலும், ராம்குமாா் குறித்த விவரம் தெரியவில்லை. இதனால், வெள்ளிக்கிழமையும் தேடுதல் பணி தொடா்ந்து நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...