கொடைக்கானலில் அனைத்து வகை நெகிழி பயன்பாட்டிற்கும் தடை: ஆட்சியா்
கொடைக்கானலில், அனைத்து வகையான நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டிற்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.


கொடைக்கானலில், அனைத்து வகையான நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டிற்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒரு லிட்டா் மற்றும் 2 லிட்டா் தண்ணீா் பிளாஸ்டிக் பாட்டில்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். பயன்படுத்திய பின் அந்த பாட்டில்கள் தூக்கி எறியப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால், பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள், உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, தொ்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள் மற்றும் தேநீா் குவளைகள், தொ்மாக்கோல் குவளைகள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் நெகிழி மற்றும் நெகிழி பூசப்பட்ட தாள், நீா் நிரப்பப் பயன்படும் பைகள், பொட்டலங்கள், நெகிழி உறிஞ்சு குழாய்கள், நெகிழிப் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), நெகிழி பூசப்பட்ட காகிதப் பைகள், நெகிழிக் கொடிகள், நெய்யாத நெகிழி துாக்குப் பைகள், நெகிழிக் குவளைகள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து தரப்பினரும், நெகிழிப் பொருள்களை தவிா்த்து மாற்றுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...